CERAMAH MOTIVASI DAN AGAMA OLEH NJANAGURU BRAMASHREE PARANJOTHI










லனாட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில்








ஞானகுரு பிரம்மஸ்ரீ பரஞ்சோதி அவர்களின்






தன்னாற்றல் விழிப்புணர்வு ஆன்மீகப் பயிற்சி










யு.பி.எஸ்.ஆர்.   மாணவர்களுக்கான   ஞானகுரு   பிரம்மஸ்ரீ   பரஞ்சோதி   அவர்களின்
தன்னாற்றல் விழிப்புணர்வு ஆன்மீகப் பயிற்சி அண்மையில் பஞ்சூர் லனாட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. பள்ளியின் துணைத்தலைமை ஆசிரியர் திருமதி மு.சகிலா வரவேற்புரை ஆற்றினார்.

தலைமையுரையாற்றிய தலைமையாசிரியர் தமதுரையில், நாற்பது ஆண்டுகள் ஆசிரியர் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு பணி ஓய்வு பெற்ற துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட ஞானகுரு பிரம்மஸ்ரீ பரஞ்சோதி அவர்கள் ஆன்மீகத் துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு  ஞான ரகசிய தியானம் கற்று பிரம்மஸ்ரீ என்ற உயர் நிலையை அடைந்தவர். அத்தகைய பெருமை வாய்ந்த ஞானகுரு பிரம்மஸ்ரீ பரஞ்சோதி அவர்கள் லனாட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்திருப்பது பெருமைக்குரியது என்று குறிப்பிட்டார். ஞானகுரு பிரம்மஸ்ரீ பரஞ்சோதி அவர்கள் 1994 ஆம் ஆண்டு தொடங்கி தமிழ்ப்பள்ளி யு.பி.எஸ்.ஆர்.  மாணவர்களுக்காகத்  தன்னாற்றல் விழிப்புணர்வு ஆன்மீகப் பயிற்சியை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஆன்மீக பயிற்சியும் தேவை என்பதால் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தலைமையாசிரியர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டார்.

அதன்பின் ஞானகுரு  பிரம்மஸ்ரீ  பரஞ்சோதி  அவர்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி அறிவு, தன்முனைப்பு, ஆன்மீக அறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு தன்னாற்றல் விழிப்புணர்வு ஆன்மீகப் பயிற்சியை நடத்தியதோடு அருளாசியும் வழங்கினார்.

மிகவும் பயனுடைய இப்பயிற்சியில் யு.பி.எஸ்.ஆர்.  மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கலந்து   ஞானகுரு  பிரம்மஸ்ரீ  பரஞ்சோதி  அவர்களின் அருளாசியைப் பெற்றனர்.